/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமத்துக்கு செல்லும் ரோடு சேதம்: ஓட்டுநர்கள் பாதிப்பு கிராமத்துக்கு செல்லும் ரோடு சேதம்: ஓட்டுநர்கள் பாதிப்பு
கிராமத்துக்கு செல்லும் ரோடு சேதம்: ஓட்டுநர்கள் பாதிப்பு
கிராமத்துக்கு செல்லும் ரோடு சேதம்: ஓட்டுநர்கள் பாதிப்பு
கிராமத்துக்கு செல்லும் ரோடு சேதம்: ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:02 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கருணாபுரி செல்லும் ரோடு சேதம் அடைந்து உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அவதி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் இருந்து கருணாபுரி செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர்.
மேலும், இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ரோடு பாதி அளவு துாரம் சிதிலம் அடைந்தும், மீதி அளவு ரோட்டில் ஜல்லி கற்களாகவும் உள்ளது.
இதனால் இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், அதிக அளவு தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும், இப்பகுதி விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை பைக்கில் எடுத்து செல்லும் போதும் தடுமாறுகின்றனர்.
மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று வரவும், விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.