ADDED : ஜூன் 30, 2024 12:52 AM
கோவை;பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
உக்கடம் அடுத்து கோட்டைமேடு, வின்சென்ட் ரோடு பகுதியில், நேற்று முன் தினம் மாலை, சந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள், கோஷ்டியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கிக்கொண்டனர். இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர், மொபைல்போனில் பதிவு செய்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட, அம்மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அங்கு வந்த உக்கடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.