/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை ரைபிள் சங்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை ரைபிள் சங்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி
கோவை ரைபிள் சங்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி
கோவை ரைபிள் சங்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி
கோவை ரைபிள் சங்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டி
ADDED : ஜூலை 17, 2024 01:15 AM

கோவை;மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, போலீசார் பயிற்சி பள்ளியில் உள்ள கோவை ரைபிள் சங்கத்தில், கடந்த 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கிறது.
கோவை ரைபிள் சங்கம் சார்பில், இந்த 49வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. போட்டியை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ரைபிள் சங்க செயலாளர் வெங்கடேசன் உடனிருந்தார்.
வரும் 21ம் தேதி வரை, ரைபிள் பிரிவு போட்டிகளும், 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை பிஸ்டல் பிரிவு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் ஏர் ரைபிள், 50மீ., பிஸ்டல், 25மீ., பிஸ்டல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1650 பேர் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள், தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர்.