/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கஸ்துாரி கார்டன் மக்களுக்கு விரைவில் வரி விதிப்பு புத்தகம் கஸ்துாரி கார்டன் மக்களுக்கு விரைவில் வரி விதிப்பு புத்தகம்
கஸ்துாரி கார்டன் மக்களுக்கு விரைவில் வரி விதிப்பு புத்தகம்
கஸ்துாரி கார்டன் மக்களுக்கு விரைவில் வரி விதிப்பு புத்தகம்
கஸ்துாரி கார்டன் மக்களுக்கு விரைவில் வரி விதிப்பு புத்தகம்
ADDED : மார் 13, 2025 06:18 AM
கோவை; கோவை மாநகராட்சி, 97வது வார்டு பிள்ளையார்புரம் ரோடு கஸ்துாரி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம் பிப்., 25ல் மனு கொடுத்தனர். அப்பகுதிக்கு கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்படி, ரூ.25 லட்சத்தில் தார் ரோடு, ரூ.18 லட்சத்தில் கான்கிரீட் ரோடு, ரூ.5 லட்சத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்கும் பணி, ரூ.7 லட்சத்தில் தெருவிளக்கு அமைத்தல், ரூ.4 லட்சத்தில் மழை நீர் வடிகால் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், பயனாளிகள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, 150 பேருக்கு மாநகராட்சி சார்பில், வரி விதிப்பு செய்து புத்தகம் வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக, 50 பேருக்கு, துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி கமிஷனர் குமரன், ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள், வரி விதிப்பு புத்தகங்களை நேற்று வழங்கினர்.