Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தானத்தில் சிறந்தது அன்னதானம்; ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளை

தானத்தில் சிறந்தது அன்னதானம்; ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளை

தானத்தில் சிறந்தது அன்னதானம்; ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளை

தானத்தில் சிறந்தது அன்னதானம்; ஏழைகளுக்கு உதவும் அறக்கட்டளை

ADDED : ஜூன் 26, 2024 09:38 PM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலையில், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்கள் முதல், மருத்துவமனை நோயாளிகள் வரை, நுாற்றுக்கணக்கானவர்களுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி வருகின்றனர் கருணை கரங்கள் அறக்கட்டளையினர்.

உடுமலை அரசு மருத்துவமனைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில், 90 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள்தான். இவர்களின் ஒருவேளை உணவுக்கு பொறுப்பேற்று, கடந்த, 300 நாட்களாக தவறாமல் அதை பின்பற்றியும் வருகின்றனர் உடுமலை கருணை கரங்கள் அறக்கட்டளையினர்.

இந்த அறக்கட்டளையை வேளாண் துறை அலுவலர் மணிகண்டன் நடத்தி வருகின்றார்.

பல தன்னார்வலர்களின் உதவியுடன் நாள்தோறும், காலை, 8:00 மணிக்கு தவறாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று குறைந்தபட்சமாக, 100 பேருக்கும் அதிகபட்சமாக தேவையான எண்ணிக்கையிலும், நோயாளிகளுக்கு காலை உணவு வழங்குகின்றனர்.

இதுமட்டுமின்றி, நாள்தோறும் காலையில் உழவர் சந்தை விவசாயிகள், வாடிக்கையாளர்கள், சிறுகுறு வியாபாரிகளுக்கு, சத்துள்ள பானம் அளிக்கும் வகையில் சிறப்பு கஞ்சி தயாரித்து வழங்குகின்றனர்.

மணிகண்டன் கூறுகையில், 'மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென எண்ணியதில், அவர்களின் பசியை முடிந்தவரை திருப்தியடைய செய்வதற்கான முயற்சி தான், இந்த காலை உணவு வழங்கும் செயல்பாடு. விவசாயிகளுக்கு சத்துள்ள பானமாக வழங்க வேண்டுமென ரம்ஜான் நோன்பு கஞ்சி முறையில் சிறப்பு கஞ்சி தயாரித்து வழங்குகிறோம். இப்பணிகளுக்கு எங்கள் குழுவினரும் ஒத்துழைப்பு வழங்கி உதவி செய்கின்றனர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us