/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழையிருந்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரவில்லை மதகு 10 செ.மீ., திறக்கப்பட்டது தான் காரணமா? மழையிருந்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரவில்லை மதகு 10 செ.மீ., திறக்கப்பட்டது தான் காரணமா?
மழையிருந்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரவில்லை மதகு 10 செ.மீ., திறக்கப்பட்டது தான் காரணமா?
மழையிருந்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரவில்லை மதகு 10 செ.மீ., திறக்கப்பட்டது தான் காரணமா?
மழையிருந்தும் சிறுவாணி அணை நீர்மட்டம் உயரவில்லை மதகு 10 செ.மீ., திறக்கப்பட்டது தான் காரணமா?
ADDED : ஜூலை 30, 2024 01:26 AM
கோவை;சிறுவாணி அணையின் மதகு, 10 செ.மீ., வரை திறக்கப்பட்டுள்ளதால், மழைபொழிவு இருந்தும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
சிறுவாணியில் கடந்த, 19ம் தேதி அணையின் நீர்மட்டம், 42 அடியாக இருந்த நிலையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து, 1,000 கனஅடி நீரை வெளியேற்றினர்.
நீர்வரத்து அதிகளவில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, நீர் வெளியேற்றப்படுவதாக கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அடுத்த ஓரிரு தினங்களில் நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், கடந்த, 26 ம் தேதி அணையின் நீர்மட்டம், 43.23 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 10.326 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
அடுத்த ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம், 45 அடியை எட்டும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக அணையின் நீர்மட்டம் மீண்டும் இறங்கு முகத்தில் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில், 30 மி.மீ., மற்றும். அணைப்பகுதியில், 28 மி.மீ., மழை பதிவானது. அணையின் நீர்மட்டம், 42.11 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.511 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
சிறுவாணி அணையை பொறுத்தவரை, அணையில் இருந்து தொடர்ந்து குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் நீர் எடுக்கப்பட்டாலும், அதிகபட்சமாக, 6 செ.மீ., அளவுக்கு மட்டுமே நீர்மட்டம் குறையும். கடந்த மூன்று நாட்களில், குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. சிறுவாணி அணையில் இருந்துவழக்கமாக வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக மதகு, 5 செ.மீ., திறக்கப்படும்.
ஆனால், நேற்று, மதகு, 10 செ.மீ., திறக்கப்பட்டுள்ளதாக தனது இணையதளத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே, அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெளிவாகியுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில்,''சிறுவாணி அணையில் இருந்து கேரள அதிகாரிகள் நீர் திறக்கவில்லை. நேற்று மழை இருந்தது.
மழைபொழிவு அதிகரித்துள்ளதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையில் இருந்து ஊடுருவல் நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர்திறப்பு குறித்து நம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்,'' என்றார்.