Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்சிமுனையில் வசதியில்லை: சுற்றுலா பயணியர் தவிப்பு

காட்சிமுனையில் வசதியில்லை: சுற்றுலா பயணியர் தவிப்பு

காட்சிமுனையில் வசதியில்லை: சுற்றுலா பயணியர் தவிப்பு

காட்சிமுனையில் வசதியில்லை: சுற்றுலா பயணியர் தவிப்பு

ADDED : ஜூலை 30, 2024 02:06 AM


Google News
வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் சுற்றுலா பயணியரை கவர்ந்த பல இடங்கள் உள்ளன. இதில், ஆழியாறு, கவியருவி, அட்டகட்டி வியூபாய்ன்ட், ஆர்கிட்டோரியம், டைகர்வேலி, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கவர்க்கல்வியூ பாயின்ட், நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணியர் அதிகம் செல்கின்றனர்.

இந்த இடங்களை சுற்றி பார்க்க வனத்துறை சார்பில், 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வால்பாறை நகரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனைப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், சுற்றுலா வருவோர் அதிருப்தியடைகின்றனர்.

சுற்றுலா பயணியர் கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணியர் அதிக அளவில் வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க வருகின்றனர். நல்லமுடி காட்சி முனையில் நடந்து செல்லும் ரோடு சீரமைக்கப்படவில்லை. கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் வனத்துறையினர் அடிப்படை வசதிகள் செய்து தர தயக்கம் காட்டி வருகின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகளில், கரடு, முரடான ரோட்டை சீரமைத்து, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us