ADDED : ஜூன் 27, 2024 10:56 PM

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து காந்தி நகர் ஏழாவது வீதியில் வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளன. இதன் பிரதான சாலையில் நேற்று முன்தினம் காலை மின்கம்பம் ஒன்று திடீரென சாய்ந்து, பலத்த சத்தத்துடன், மின் கம்பிகள் உரசியதால் தீப்பொறியுடன் சாலையில் விழுந்தது.
மின் கம்பம் சாய்வதற்கு சில வினாடிகளுக்கு முன் அவ்வழியே ஸ்கூட்டரில் சென்றவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அங்கு வந்த மின் வாரியத்தினர் அப் பகுதியில் மின் வினியோகத்தை தடை செய்தனர். உடனடியாக புதிய கம்பம் நடப்பட்டு, மின் கம்பிகள் இணைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டது.
மின்வாரியத்தினர், மின் கம்பம் மீது வாகனத்தில் வந்து யாரோ மோதியதால் இச்சம்பவம் நடந்ததாக, அப்பகுதியினரிடம் கூறியதாகவும், மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.