/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிணறு வெட்டும் பணியில் விபத்து; தொழிலாளர்கள் மூன்று பேர் பலி கிணறு வெட்டும் பணியில் விபத்து; தொழிலாளர்கள் மூன்று பேர் பலி
கிணறு வெட்டும் பணியில் விபத்து; தொழிலாளர்கள் மூன்று பேர் பலி
கிணறு வெட்டும் பணியில் விபத்து; தொழிலாளர்கள் மூன்று பேர் பலி
கிணறு வெட்டும் பணியில் விபத்து; தொழிலாளர்கள் மூன்று பேர் பலி
UPDATED : ஜூலை 30, 2024 07:48 AM
ADDED : ஜூலை 30, 2024 06:56 AM

திருவெண்ணைநல்லூர்: திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறிக்கை கிராமத்தில் நேற்றிரவு(ஜூலை 29) கண்ணன் என்பவரது விவசாய கிணற்றில் கிணறு வெட்டும் பணியில் ஹரி கிருஷ்ணன், தணிகாசலம், முருகன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரத்தில் கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கியதில் கயிறு அறுந்து மூன்று தொழிலாளர்கள் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மூவரது உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் உறவினர்கள் க;றியதாவது: கிணற்றுக்குள் வெடிவைக்கும் போது விபத்து ஏற்பட்டு மூவரும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர்.