/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்
அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்
அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்
அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூன் 30, 2024 12:47 AM
கோவை:அவிநாசி ரோடு, ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் அருகே உயர் மட்ட மேம்பாலத்துக்கு துாண்கள் அமைக்கும் பணிநடக்கிறது.
இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, சிங்காநல்லுார் சந்திப்பில் இருந்து, ஹோப் காலேஜ் செல்லும் வாகனங்கள், ராமானுஜம் நகர் பஸ் ஸ்டாப் அருகே லட்சுமிபுரம் வழியாக, மசக்காளிபாளையம் ரோட்டை பயன்படுத்தி, ஹோப் காலேஜ் அடையலாம்.
சிங்காநல்லுார் சந்திப்பில் இருந்து ஒண்டிப்புதுார், எல் அண்ட் டி பைபாஸ் வழியாகவும், அவிநாசி ரோட்டை அடையலாம். சொந்த வாகனங்களை பயன்படுத்துவோர், வரும் இரு வாரங்களுக்கு சத்தி ரோடு மற்றும் திருச்சி ரோட்டை பயன்படுத்தி, பீளமேடு, ஹோப் காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என, கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.