ADDED : ஜூலை 01, 2024 02:37 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு, பா.ஜ., மாநில தலைவர் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை தலைவர் ஜி.டி., கோபாலகிருஷ்ணன், 79. இவர், சாந்தி நிகேதன் பள்ளி தாளாளர், துரைஸ் தியேட்டர் மேனேஜிங் பார்ட்னராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த, 28ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று நேரில் சென்று, அவரது குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், அமுல்கந்தசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.