/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல் சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
சாலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2024 11:24 PM
கோவை:கோவை மாநகராட்சி, 26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு எல்லைத்தோட்ட சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று, பீளமேடு மக்கள் கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பீளமேடு எல்லைத்தோட்ட சாலை, ஏழாவது குறுக்குத்தெருவில் சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். அதை சர்வே செய்து, ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
அதே போல், எல்லைத்தோட்ட சாலை சுமார் அரை கி.மீ., தொலைவை கொண்டது. அச்சாலையின் இரு பகுதிகளிலும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இச்சாலையிலுள்ள மழைநீர் வடிகாலை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும்.
இதற்கான பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மழைகாலத்தில் வடிகால்கள் நிறைந்து, குடியிருப்புக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்படும் என்று, பீளமேடு மக்கள் கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.