/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள்: கால்வாய்களை துார்வார கோரிக்கை தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள்: கால்வாய்களை துார்வார கோரிக்கை
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள்: கால்வாய்களை துார்வார கோரிக்கை
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள்: கால்வாய்களை துார்வார கோரிக்கை
தொடர் மழையால் நிரம்பும் நீர் நிலைகள்: கால்வாய்களை துார்வார கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2024 12:32 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், பெய்யும் தொடர் மழையால், ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த ஒரு வார காலமாக, பலத்த மழை பெய்கிறது. நேற்று முன்தினம், பொள்ளாச்சியில், 86.3 மி.மீ., அளவில் மழையளவு பதிவானது.
இந்நிலையில், கடும் கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளுக்கு, தொடர் மழை காரணமாக ஓரளவுக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேவம்பாடிவலசு குளம், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்துஅதிகரித்து நிரம்பி வருகிறது.
இதேபோல, கிராமப்புறங்களில் ஆங்காங்கே உள்ள குட்டைகளும் நிரம்பி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தென்னை சாகுபடிக்கு, தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மானாவாரி பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. மேலும், கிணறு மற்றும் குளங்கள் வாயிலாக பாசன வசதியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், காய்கறி சாகுபடிக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களில், நீர்நிலைக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிகப்படியான குளம், குட்டைகள் உள்ளன. பல நீர்நிலைகளுக்கான கால்வாய்கள், ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி வருகின்றன. மேலும், முட்புதர்கள் நிறைந்து, காடு போல் காட்சி அளிக்கிறது.
நீர்நிலைகளுக்கான கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். நீர்நிலை ஒட்டிய பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.