Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜமாபந்தியில் தீர்வு கிடைக்குமா? மனு அளித்த மக்கள் எதிர்பார்ப்பு

ஜமாபந்தியில் தீர்வு கிடைக்குமா? மனு அளித்த மக்கள் எதிர்பார்ப்பு

ஜமாபந்தியில் தீர்வு கிடைக்குமா? மனு அளித்த மக்கள் எதிர்பார்ப்பு

ஜமாபந்தியில் தீர்வு கிடைக்குமா? மனு அளித்த மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 26, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி தாலுகா, நெகமம் உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில் மொத்தம், 253 மனுக்கள் பெறப்பட்டன.

பொள்ளாச்சி தாலுகா, நெகமம் உள்வட்ட கிராம மக்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.

தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவ்வகையில், கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ. நாகூர், கொல்லப்பட்டி, போலி கவுண்டம்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி மற்றும் பூசாரிப்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர். அதில், பட்டா மாறுதல் -14, மாற்றுத்திறனாளி உதவித்தொகை 1, இலவச வீட்டுமனை பட்டா கோருதல் -893, நத்தம் பட்டா கோருதல் 7, நத்தம் பட்டா மாறுதல் 28, ஆக்கிரமிப்பு அகற்ற கோருதல் 3, சான்று கோருதல் 2, நில அளவை 20, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் -51, இதர துறை 12 என, மொத்தம், 253 மனுக்கள் வரப்பெற்றன.

* உடுமலை தாலுகா அலுவலகத்தில், குடிமங்கலம் உள் வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது.

கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, 300 பேரும், முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள், 552 பெறப்பட்டன.

- நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us