/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழாபி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா
பி.ஏ., பொறியியல் கல்லுாரியில் 11வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 03, 2024 11:51 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். துணை தலைவர் லட்சுமி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார்.
பெங்களூரு டெலாய்ட் கன்சல்டிங் இயக்குனர் தாமோதரன் ராமன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்க வேண்டும்.பொறியாளராக சமூகத்தில் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் பட்டதாரிகள், தங்களது அறிவு மற்றும் வாழ்க்கை சார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு, தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும், குறிப்பாக தான் சார்ந்த சமூகத்தையும், தன்னை சுற்றி நடப்பவை பற்றிய புரிதல், விழிப்புணர்வு வேண்டும்,'' என்றார்.
விழாவில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் தேர்வில் வெற்றி பெற்ற மொத்தம், 254 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடந்தது. அதில், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


