/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ முகாமில் 2,000 பேர் சிகிச்சை மருத்துவ முகாமில் 2,000 பேர் சிகிச்சை
மருத்துவ முகாமில் 2,000 பேர் சிகிச்சை
மருத்துவ முகாமில் 2,000 பேர் சிகிச்சை
மருத்துவ முகாமில் 2,000 பேர் சிகிச்சை
ADDED : செப் 30, 2025 10:58 PM
காரமடை; காரமடையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை, 9 முதல் 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 2,000 பேர் பங்கேற்றனர்.
கலெக்டர் பவன்குமார், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, காரமடை நகராட்சி தலைவர் உஷா, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் சுதாகர், வட்டார மேற்பார்வையாளர் சியாமளா மற்றும் பலர் இருந்தனர்.


