/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரே ஒரு ஓ.ஏ. பணிக்கு 290 விண்ணப்பங்கள்ஒரே ஒரு ஓ.ஏ. பணிக்கு 290 விண்ணப்பங்கள்
ஒரே ஒரு ஓ.ஏ. பணிக்கு 290 விண்ணப்பங்கள்
ஒரே ஒரு ஓ.ஏ. பணிக்கு 290 விண்ணப்பங்கள்
ஒரே ஒரு ஓ.ஏ. பணிக்கு 290 விண்ணப்பங்கள்
ADDED : அக் 23, 2025 12:05 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்த ஒரு காலி பணியிடத்திற்கு, 290 நபர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதற்கான நேர்காணல் நேற்று டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், எழுத்து தேர்வு, தமிழ் வாசித்தல், மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியும் நடந்தது.


