/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாலையில் திடீரென எரிந்த சொகுசு கார் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சாலையில் திடீரென எரிந்த சொகுசு கார் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சாலையில் திடீரென எரிந்த சொகுசு கார் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சாலையில் திடீரென எரிந்த சொகுசு கார் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சாலையில் திடீரென எரிந்த சொகுசு கார் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ADDED : செப் 04, 2025 05:37 AM

ஆலந்துார் : ஜி.எஸ்.டி., சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார், திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. காரில் பயணித்த இரு குழந்தைகள் உட்பட ஆறு பேர், அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
வேளச்சேரியை சேர்ந்தவர் டோமினிக் சேவியர், 39; கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவரது உறவினர்கள் அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்தனர்.
அவர்களை, சென்னை விமான நிலையத்தில் இருந்து, தன் 'ஹுண்டாய் வெர்னா' சொகுசு காரில் ஏற்றிக் கொண்டு, சேவியர் வேளச்சேரிக்கு புறப்பட்டார்.
காரில், சேவியர், இரு பெண்கள், 5 வயது சிறுமி, 6 மாத பெண் குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் பயணித்தனர். ஆலந்துார் மாநகர பணிமனை அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் சீரமைப்பு பணி நடந்தது.
கார் அவ்வழியாக செல்ல முடியாததால், ஆலந்துார் நீதிமன்றம் அருகே உள்ள உள்வட்ட சாலை வழியாக, வேளச்சேரிக்கு செல்ல திரும்பினார்.
அப்போது, காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததை கண்ட சேவியர், ஆலந்துார் நீதிமன்ற சுற்றுச்சுவர் அருகே, ஜி.எஸ்.டி., சாலையோரம் காரை நிறுத்தினார்.
பின், காரில் இருந்த அனைவரும் இறங்கினர். அடுத்த சில நிமிடங்களில், கார் தீப்பற்றி எரிய துவங்கியது. உடனே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதற்குள் காரின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து, பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.