Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/81 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு... அடையாள அட்டை!வீடு, வீடாக தபாலில் வினியோகம்

81 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு... அடையாள அட்டை!வீடு, வீடாக தபாலில் வினியோகம்

81 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு... அடையாள அட்டை!வீடு, வீடாக தபாலில் வினியோகம்

81 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு... அடையாள அட்டை!வீடு, வீடாக தபாலில் வினியோகம்

UPDATED : பிப் 11, 2024 02:23 AMADDED : பிப் 10, 2024 09:19 PM


Google News
Latest Tamil News
கோவை:கோவை மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், 81 ஆயிரத்து, 480 பேருக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு, 'போஸ்ட் மேன்' மூலம் வீடு வீடாகச் வழங்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆய்வு செய்து, உறுதிப்படுத்தினர். தேர்தல் பிரிவினர் தெரிவித்த தகவல்களை கேட்டு, ஆணைய அதிகாரிகள் திருப்தி தெரிவித்தனர்.

77 லட்சம் வீடுகள்


இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை, 40 லட்சத்து, 33 ஆயிரத்து, 451. மொத்தம், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், எஸ்.சி., தொகுதி ஒன்று அடக்கம். மாவட்டம் முழுவதும், 77 லட்சத்து, 408 வீடுகள் இருக்கின்றன. இவற்றில், 30 லட்சத்து, 81 ஆயிரத்து, 594 வாக்காளர்கள் வசிக்கின்றனர்.

ஒரு லட்சத்து, 7,874 வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்க வேண்டியுள்ளது. அதில், 81 ஆயிரத்து, 480 வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டு, போஸ்ட் ஆபீஸில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

போஸ்ட்மேன், வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பர். மீதமுள்ள, 26 ஆயிரத்து, 394 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

ஓட்டுச்சாவடியில் வசதி


மாவட்ட அளவில், மொத்தம், 1,015 இடங்களில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. நகர் பகுதியில், 2,085, புறநகர் பகுதியில், 992 ஓட்டுச்சாவடிகள் அமையும். பதற்றமான, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் எவை என, போலீசார் மூலம் ஆய்வு செய்து, பட்டியல் பெறப்பட்டிருக்கிறது.

அனைத்து இடங்களிலும் தேவையான பர்னிச்சர், விளக்கு, ரேம்ப், கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம், 7,152 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 4,431 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4,253 விவி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மைக்ரோ அப்சர்வர்


தேர்தல் பணியில் ஈடுபட, 140 மைக்ரோ அப்சர்வர்கள், 16 நோடல் ஆபீசர்கள் உட்பட, 18 ஆயிரத்து, 613 பேர் தேவை. அனைத்து பணியிடத்துக்கும், அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். தேர்தல் தேதி அறிவித்ததும் அடுத்த கட்ட பணிகள் அடுத்தடுத்து, படுவேகமாக நடைபெறும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'ஒரு வாரத்துக்குள் கிடைக்கும்'

கோவை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அதிகாரி ஜெயராஜ் பாபு கூறுகையில், ''கோவை, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த, புதிய வாக்காளர்களில், 98 ஆயிரம் பேருக்கு தபால் துறையின் விரைவுத் தபால் மூலமாக அனுப்பும் பணி துவங்கியிருக்கிறது; இன்னும் ஒரு வாரத்துக்குள் வாக்காளர்களின் கைகளில், அடையாள அட்டை கிடைக்கும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us