/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிமைத்தொகை கேட்டு 866 பெண்கள் விண்ணப்பம் உரிமைத்தொகை கேட்டு 866 பெண்கள் விண்ணப்பம்
உரிமைத்தொகை கேட்டு 866 பெண்கள் விண்ணப்பம்
உரிமைத்தொகை கேட்டு 866 பெண்கள் விண்ணப்பம்
உரிமைத்தொகை கேட்டு 866 பெண்கள் விண்ணப்பம்
ADDED : அக் 23, 2025 11:56 PM
கோவை:  கோவை மாநகராட்சி, 70, 83வது வார்டு மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், ஐ.எம்.ஏ. ஹாலில் நேற்று நடந்தது. மத்திய மண்டல தலைவர் மீனா துவக்கி வைத்தார்.
மொத்தம் 1,554 மனுக்கள் பெறப்பட்டன. ரேஷன் கார்டு முகவரி மாற்றம், பெயர் திருத்தம், பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட 123 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்வது, மருத்துவ காப்பீடு அட்டைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்டவை தனியாக மேற்கொள்ளப்பட்டது. மனுக்களுக்கு தேவையான ஆவணங்கள், மாநகராட்சியால் இலவசமாக நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டன. 1,431 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டன. உரிமைத்தொகை கேட்டு, 866 பெண்கள் விண்ணப்பித்தனர். சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, கண் பரிசோதனை செய்யப்பட்டது .
முகாமில், உதவி கமிஷனர் நித்யா, நிர்வாக அலுவலர் செந்தில், கவுன்சிலர்கள் சுமா, ஷர்மிளா, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


