/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலக்காடு அருகே துணி கடையில் தீ விபத்துபாலக்காடு அருகே துணி கடையில் தீ விபத்து
பாலக்காடு அருகே துணி கடையில் தீ விபத்து
பாலக்காடு அருகே துணி கடையில் தீ விபத்து
பாலக்காடு அருகே துணி கடையில் தீ விபத்து
ADDED : பிப் 10, 2024 11:45 PM

பாலக்காடு;பாலக்காடு அருகே, துணி கடையில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு அருகே அலநல்லுார் பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில், 'வைரஸ்' என்ற பெயரில் துணிக்கடை செயல்படுகிறது.
இந்த துணிக்கடையில், நேற்று காலை, 9:00 மணியளவில் திடீரென தீ பற்றி எரிவதை, கடை திறக்க வந்த ஊழியர்கள் கண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மண்ணார்க்காடு மற்றும் பெரிந்தல்மண்ணா தீயணைப்பு படையினர், போலீசார், பொதுமக்கள் சேர்ந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், துணி கடை முழுமையாக சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.