ADDED : செப் 23, 2025 11:06 PM

வடவள்ளி; வடவள்ளி, சிறுவாணி ரோட்டோரத்தில், மாத்திரைகள், மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது.
கோவையில், சமீப காலமாக, சாலையோரங்கள், நீர்நிலைகளில், மருத்துவ கழிவு கொட்டுவது அதிகரித்து வருகிறது. வடவள்ளி, சிறுவாணி ரோடு, டாஸ்மாக் மதுக்கடை அருகே, சாலையோரத்தில், மருந்துகள், மாத்திரைகள், மருந்து செலுத்தும் ஊசிகள் என, மருத்துவ கழிவு குவியலாக கொட்டப்பட்டுள்ளன. அப்பகுதியில், சுற்றுச்சூழலும், நோய் பாதிப்பும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, மருத்துவ கழிவு முறையாக அகற்ற வேண்டும். பொது இடத்தில் கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.