/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஆய்வு பணிக்கு நிகராக மொழியாக்கம் எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வழி' 'ஆய்வு பணிக்கு நிகராக மொழியாக்கம் எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வழி'
'ஆய்வு பணிக்கு நிகராக மொழியாக்கம் எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வழி'
'ஆய்வு பணிக்கு நிகராக மொழியாக்கம் எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வழி'
'ஆய்வு பணிக்கு நிகராக மொழியாக்கம் எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க வழி'
ADDED : செப் 13, 2025 11:18 PM
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அறிவியல் தமிழ் தேசிய கருத்தரங்கு நடந்தது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை கமிஷனர் ஜெயசீலன் பேசியதாவது:
மொழி பெயர்ப்பில் கலைச் சொற்களின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்தது. அறிவியல் நுால்களுக்கு மொழி பெயர்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மொழி தெரிந்தவர்களுக்கு, அறிவியல் அவ்வளவாக தெரிவதில்லை.
அறிவியல் தெரிந்தவர்களுக்கு அவ்வளவாக மொழி தெரிவதில்லை. அறிவியலாளர்கள், மொழியின் நுட்பம் குறித்து ஆழமாக தெரிந்து கொண்டு, தொடர்ச்சியாக எழுத வேண்டும். பல்கலைகள், மொழிச்சொற்களை தரப்படுத்த குழு ஏற்படுத்த வேண்டும்.
மொழிப் பெயர்ப்பு பணிகளை, ஆய்வுப் பணிகளுக்கு நிகராக மேற்கொள்ளும்போதுதான், எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.