/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு :டிரோன் பயன்படுத்த அறிவுரைபூச்சி கொல்லி மருந்து தெளிப்பு :டிரோன் பயன்படுத்த அறிவுரை
பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு :டிரோன் பயன்படுத்த அறிவுரை
பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு :டிரோன் பயன்படுத்த அறிவுரை
பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு :டிரோன் பயன்படுத்த அறிவுரை
ADDED : பிப் 12, 2024 12:37 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வட்டத்துக்கு உட்பட்ட பருத்தி சாகுபடி ஆகும் இடங்களில், டிரோன் வாயிலாக பூச்சி கொல்லி மருந்து தெளிக்க, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேளாண்மை துறை சார்பில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு மற்றும் மதுக்கரை வட்டாரங்களில், நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கம், 2023 - -24, டிரோன் வாயிலாக பருத்தி பயிருக்கு பூச்சி கொல்லிமருந்து தெளிப்பு குறித்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இந்த டிரோன் வாயிலாக தெளிப்பது, ஒரு சிறந்த தொழில் நுட்பம் மற்றும் கால நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் வாயிலாக, ஒரு ஏக்கர் தெளிப்பு செய்ய, பத்து நிமிடம் போதுமானது.
காய்கறி பயிர்களான, தக்காளி, கத்திரி, வெண்டை, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, வாழை மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு, இதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கலாம்.
பத்து லிட்டர் மருந்து கரைசல் தெளிப்புக்கு, 500 ரூபாய் கட்டணம் ஆகிறது. எனவே, இந்த தொழில்நுட்பத்தை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு மற்றும் மதுக்கரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், டிரோன் தெளிப்பு செயல் விளக்கம், சொக்கனுார் -சட்டக்கல்புதுார் கிராமத்திலும், வடபுதுார் கிராமத்திலும் நடந்தது.
இதில், ஏராளமான விவசாய பெருமக்கள் மற்றும் அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
இச்செயல் விளக்க முகாமிற்கான ஏற்பாடுகளை, துணை வேளாண்மை அலுவலர் மோகனசுந்தரம் உதவி வேளாண்மை அலுவலர் மணி ஆகியோர் செய்திருந்தனர்.