/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை
கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை
கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை
கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை
ADDED : மார் 20, 2025 11:17 PM

வால்பாறை: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வால்பாறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:
தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளில் மின் சாதனங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். பழுதடைந்த ஒயர்களை மாற்றியமைக்க வேண்டும்.
வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முதியவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஹீட்டர் சுவிட்ச் போட்டுவிட்டு குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ளதால், மின் அழுத்தம் அதிகமாகி, மின் சாதனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வீடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.