/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளேக் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு பிளேக் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு
பிளேக் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு
பிளேக் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு
பிளேக் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி வழிபாடு
ADDED : ஜூன் 19, 2025 05:46 AM

மேட்டுப்பாளையம்: காரமடை பிளேக் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவின் ஒருபகுதியாக அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், அண்ணா நகரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் பூச்சாட்டு விழாவின் துவக்க நிகழ்வாக கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. நேற்று காலை பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், மாவிளக்கு போடுதல் நடந்தது. மாலை அலகு குத்தி தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் காரமடை நகராட்சி கவுன்சிலர்கள் வனிதா, அனிதா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு நடத்துதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.----