ADDED : மார் 20, 2025 11:29 PM
பொள்ளாச்சி: தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தினர், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.
அதில், இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பறக்கும் படை பணிக்கான பெயர் பட்டியலில், உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பெயர்கூட இல்லை. இந்த கல்வியாண்டில் பெயர் வராததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
எனவே, 50:50 என்ற சதவீதம் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களை (நிலை-2) பறக்கும் படை பணியில் நியமிக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.