/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா
சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா
ADDED : செப் 03, 2025 11:06 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மூல பிட்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, பொள்ளாச்சி - பல்லடம் ரோடு வாணியர் மடத்தில் இருந்து சீர்வரிசையுடன் ஊர்வலமாக சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சென்றனர்.
அங்கு அருள்பாலிக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், வந்தியம்மை தாயார், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.