/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.ஏ., சர்வதேச பள்ளி பொதுத்தேர்வில் அபாரம் பி.ஏ., சர்வதேச பள்ளி பொதுத்தேர்வில் அபாரம்
பி.ஏ., சர்வதேச பள்ளி பொதுத்தேர்வில் அபாரம்
பி.ஏ., சர்வதேச பள்ளி பொதுத்தேர்வில் அபாரம்
பி.ஏ., சர்வதேச பள்ளி பொதுத்தேர்வில் அபாரம்
ADDED : மே 19, 2025 11:19 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, புளியம்பட்டி பி.ஏ., சர்வதேச பள்ளி, சி.பி.எஸ்.சி., 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வில், மாணவர் ரிஷி கார்த்திக், 492 மதிப்பெண்கள் பெற்று வட்டார அளவில் முதல் இடம் பெற்றார். மேலும் மாணவி அக் ஷராஸ்ரீ, 94 சதவீதம் மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மேலும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர். இதே போன்று, பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவி லயாஸ்ரீ, 488 மதிப்பெண்களுடன் முதல் இடம் பிடித்தார். வருணிகா மற்றும் அர்ஷிதா ஆகிய இருவரும், 97 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளித் தலைவர் அப்புகுட்டி, பள்ளி முதல்வர் மகேஷ் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி மணிகண்டன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


