/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஏ.ஐ. ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் சாதனை ஏ.ஐ. ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் சாதனை
ஏ.ஐ. ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் சாதனை
ஏ.ஐ. ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் சாதனை
ஏ.ஐ. ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் சாதனை
ADDED : செப் 25, 2025 12:41 AM

கோவை: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஏ.பி.பி., லிமிடெட் நிறுவனம், 'ஏபிபி ஆக்சிலரேட்டர் 2025' என்கிற நிகழ்ச்சியை, கே.பி.ஆர்., தொழில்நுட்பக் கல்லுாரியில் வெற்றிகரமாக நடத்தியது.
இந்த ஏ.ஐ., ஹேக்கத்தான், தரவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்தி, புதுமையான தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கியது. கோவையைச் சேர்ந்த, 15 பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன.
மாணவர்கள் தினேஷ், முகமது அக்பீப், ராகுல் மற்றும் ஜிஸ்னு ஆகியோர் அடங்கிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் குழு, ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'அறிவார்ந்த அலாய் ஆப்டிமைசேஷன்' என்ற தீர்வுக்காக, தொழில் துறைக்கான சிறந்த கண்டு பிடிப்பு பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றனர்.
இந்த குழுவுக்கு ரூ.84,000 மதிப்புள்ள பரிசு கூப்பன், ஏ.பி.பி., நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேரும் வாய்ப்பு கிடைத்தது. இப்பயிற்சி, மாணவர்கள் இறுதியாண்டில் தொழில் துறையோடு நேரடி அனுபவத்தை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.