/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெருமாள் கோவிலில் தடுப்புகள் அமைப்பு பெருமாள் கோவிலில் தடுப்புகள் அமைப்பு
பெருமாள் கோவிலில் தடுப்புகள் அமைப்பு
பெருமாள் கோவிலில் தடுப்புகள் அமைப்பு
பெருமாள் கோவிலில் தடுப்புகள் அமைப்பு
ADDED : டிச 05, 2025 08:34 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சில்வர் வரிசை தடுப்பு, நன்கொடையாளர்கள் வாயிலாக அமைக்கப்பட்டது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக இரும்பு வரிசை தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.பல ஆண்டுகளாக அமைக்கப்பட்டு இருந்த தடுப்பை மாற்றி, புதிய தடுப்பு அமைக்க நன்கொடையாளர்கள் முன்வந்தனர்.
அதன்பேரில், நன்கொடையாளர்கள் ரமேஷ்குமார், காமராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சில்வர் வரிசை தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதை, பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமார், கோவிலுக்கு ஒப்படைத்தார்.


