/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுநேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
நேரு கல்வி குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
ADDED : பிப் 12, 2024 01:11 AM

போத்தனூர்;நேரு கல்வி குழுமம் சார்பில், பி.கே.தாஸ் நினைவு, சிறந்த ஆசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடந்தது.
திருமலையாம்பாளையத்தில் நேரு கல்வி குழும வளாகத்திலுள்ள அரங்கில் நடந்த விழாவிற்கு, கல்வி குழும நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை தர்மபுரி, நீலாம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ்செல்விக்கும், சிறந்த முதல்வர்களுக்கான விருதை கோவை, வெள்ளலூர் எல்.ஜி., பள்ளியின் கணேஷ், சி.எம்.எஸ்.வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் டேனியல், பொள்ளாச்சி ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் டெல்பின் மரியா ஆகியோருக்கும், அருட்தந்தை தாமஸ் தொட்டுங்கால், பீளமேடு அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் வழங்கினர். 70 பேருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
நேரு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் அனிருதன், நேரு கல்வி குழும செயலாளர் கிருஷ்ணகுமார், செயல் இயக்குனர் நாகராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.