Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூட்டை உடைத்து திருட்டு

பூட்டை உடைத்து திருட்டு

பூட்டை உடைத்து திருட்டு

பூட்டை உடைத்து திருட்டு

ADDED : மார் 20, 2025 11:39 PM


Google News
பெ.நா.பாளையம்,: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் பூட்டை உடைத்து, திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காளிபாளையம், கோமாளி அரங்கன் கோவில் வீதியில் வசிப்பவர் கார்த்தி, 36; மார்க்கெட்டிங் தொழில் செய்கிறார். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சரவணம்பட்டிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம் காணாமல் போய் இருந்தது. புகாரின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us