/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு
நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு
நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு
நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 20, 2025 05:56 AM

பந்தலுார் : பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி தலைவராக இருப்பவர் பழங்குடியினத்தை சேர்ந்த சிவகாமி. இவரை ஒப்பந்ததாரர்கள் தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'நகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஷாஜி மற்றும் நஸ்ரூ ஆகியோர் தன்னை மிரட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், பழங்குடியினத்தை சேர்ந்த தன்னை ஜாதி பெயரை கூறி திட்டினர்,' என, தேவாலா போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், 'நகராட்சியில் ஒப்பந்த பணிகள் குறித்து தலைவரிடம் பேச சென்று போது, தலைவர் சிவகாமி மற்றும் அவரின் உதவியாளர் சைபுல்லா ஆகியோர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினர்,' என, ஒப்பந்ததாரர் இருவரும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து, தலைவர் சிவகாமி மற்றும் அவரின் உதவியாளர் சைபுல்லா ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.