ADDED : செப் 10, 2025 06:58 AM
கோவை; நீலிக்கோனாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி, 73. சில நாட்களுக்கு முன் சூலுாரில் உள்ள மகளை பார்த்து விட்டு, தனியார் பஸ்சில் கோவை வந்தார். அவர் அருகில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர், லட்சுமி அணிந்திருந்த செயினின் கொக்கி கழன்று இருப்பதாக தெரிவித்தார். செயினை கழட்டிய லட்சுமி, தனது பையில் உள்ள பர்ஸில் வைத்தார்.
ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி, பர்ஸை சோதனையிட்ட போது, அதில் இருந்து செயின் மாயமாகியிருந்தது. ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.