/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செஸ், கேரம் போட்டி நடுவர் பணி; ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு செஸ், கேரம் போட்டி நடுவர் பணி; ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
செஸ், கேரம் போட்டி நடுவர் பணி; ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
செஸ், கேரம் போட்டி நடுவர் பணி; ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
செஸ், கேரம் போட்டி நடுவர் பணி; ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு
ADDED : செப் 26, 2025 05:33 AM
கோவை; கோவை வருவாய் மாவட்ட அளவில் நடப்பு, 2025-26ம் கல்வி ஆண்டுக்கான செஸ், கேரம் போட்டி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 27ம் தேதி நடக்கிறது.
செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரும், கேரம் போட்டியில் முதலிடம் வென்ற மாணவ, மாணவியர் அனைவரும் தவறாமல் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு குறுமைய செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14, 17, 19 வயதுக்கு உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கேரம் போட்டிக்கு அரசு, தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், 19 பேரும், செஸ் போட்டிக்கு, 14 பேரும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை உரிய தேதியில் பணி விடுவிப்பு செய்ய, அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.