ADDED : மார் 19, 2025 02:45 AM

சோமனுார்:கோவை மாவட்டம், சோமனுார் செந்தில்நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்; வாழைக்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மதியம், இவரது 2 வயது குழந்தை சிரஞ்சீவி விக்ரம், வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தான்.
திடீரென குழந்தையை காணாததால், பதறிய பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.
சந்தேகமடைந்து வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.