Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

ADDED : அக் 18, 2025 09:26 AM


Google News
சென்னை: கோவை - திண்டுக்கல் இடையே, மூன்று நாட்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

 கோவையில் இருந்து, இன்றும், 21, 22ம் தேதிகளிலும், காலை 9:35 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் மதியம் 1:10 மணிக்கு திண்டுக்கல் செல்லும்

 திண்டுக்கல்லில் இருந்து இன்றும், 21, 22ம் தேதிகளிலும், மதியம் 2:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 5:50 மணிக்கு கோவை செல்லும். போத்தனுார், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us