/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலிபுதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
புதை மணலில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி
ADDED : பிப் 12, 2024 01:13 AM
பேரூர்:நரசீபுரம், சின்னாறு அணைக்கட்டு பகுதியில், புதை மணலில் சிக்கி, கல்லுாரி மாணவர் பலியானார்.
சின்னவேடம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த திருமூர்த்தி மகன், மனோ, 19; சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி.,(சி.ஏ.,) இரண்டாமாண்டு படித்து வந்தார்.
நேற்று நண்பர்கள் 17 பேருடன், தொண்டாமுத்துார் அடுத்த நரசீபுரம் சென்றார். அங்கு, சின்னாறு அணைக்கட்டு பகுதியில் குளிக்கும்போது, மனோ உள்ளிட்ட மூவர், புதை மணலில் சிக்கிக்கொண்டனர். கூச்சல் கேட்டு அருகில் இருந்து வந்த விவசாயிகள், இருவரை உயிருடன் மீட்டனர்; மனோ பலியானார்.
தொண்டாமுத்துார் தீயணைப்பு துறையினர், மனோவின் உடலை மீட்டனர். ஆலாந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.