Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி

 பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி

 பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி

 பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி

ADDED : டிச 04, 2025 08:14 AM


Google News
கோவை: 'சிடா' சார்பில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி கண்காட்சி இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது. பாதுகாப்புத் துறை சார்ந்து அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஏராளமாக பங்கேற்பதால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சங்கம் (சிடா) இயக்குநர் பழனிகுமார் கூறியாதவது:

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவ்வகையில், அடுத்த 5 ஆண்டுகளில், இத்துறையில் கோவை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்துக்கு வாய்ப்புள்ளது.

கோவை, ரத்தினம் கிராண்ட் ஹாலில் இன்று துவங்கும் கண்காட்சியில், 100 ஸ்டால்கள் அமைகின்றன. முப்படை பிரிவுகளின் சார்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவையான பாதுகாப்புத் தளவாட உபகரணங்களை கொள்முதல் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு தளவாடங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்கள், ஹெச்.ஏ.எல்., பாரத் எர்த்மூவர்ஸ், தனியார் மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் காட்சிப்படுத்த உள்ளன.

இந்நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உபகரணங்களுக்கான ஆர்டர்களைப் பெறுவது எப்படி, டெண்டரில் பங்கேற்பது, ஜெம் போர்டல் பதிவு, சான்றிதழ்களைப் பெறுவது, தரம் என அனைத்து வகையான உதவிகளையும், ஸ்டால்களிலேயே செய்கின்றன. மூன்று நாட்கள் நடக்கும் கருத்தரங்குகளிலும், விரிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், இத்துறையில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விவரிக்க உள்ளது.

நேரடியான பாதுகாப்புத் தளவாடங்கள் தவிர, உணவு சார்ந்த ஆர்டர்களையும் கண்காட்சியில் பெற முடியும். வர்த்தக நெட்வொர்க்கிங் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

கண்காட்சி காலை 10:00 முதல் 6:00 மணி வரை நடக்கிறது. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இன்று என்னென்ன?

முதல்நாளில், வி.வி.ஐ.பி., நெட்வொர்க்கிங் நடக்கிறது. கப்பல் துறையில் உள்நாட்டுத் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை புத்தாக்கம் மற்றும் ஏற்றுமதிக்கு ஆயத்தமாதல் என, இரு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us