Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்புப்பெட்டகம்

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்புப்பெட்டகம்

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்புப்பெட்டகம்

டிஜி லாக்கர் - சான்றிதழ்களின் பாதுகாப்புப்பெட்டகம்

ADDED : செப் 27, 2025 01:08 AM


Google News
வ ங்கியில் வழங்கப்படும் லாக்கரை போன்றதுதான் டிஜி லாக்கர். வங்கிக்கு நேரடியாக சென்று முக்கியமான பொருட்களை லாக்கரில் வைத்து பாதுகாப்போம். இந்த டிஜிட்டல் லாக்கரில் முக்கியமான ஆவணங்களை பாது-காப்பாக வைத்திருக்க முடியும்.

டிஜி லாக்கர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் லாக்கரில் ஆவணங்க-ளைச் சேமித்து வைக்கவும், தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்தவும், சரிபார்க்கவும் முடியும். டிஜி லாக்கரில் முக்கிய ஆவணங்களான பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பள்ளி மதிப்பெண்கள் சான்று-கள், இன்சூரன்ஸ் பாலிசி ஆவணங்கள் என அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்க முடி-யும்.

குறிப்பாக இது மாணவர்களுக்கான வரப்பிரசாதம் எனலாம்.

www.digilocker.gov.in/ என்ற இணையதளத்தில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி டிஜி-லாக்கர் வாலட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்வதற்கு ஆண்ட்ராய்ட்/ஐஓஎஸ் பயன்பாடும் உள்ளது. டிஜி லாக்கர் என்பது ஒரு மெய் நிகர் செயலி. டிஜி லாக்கரில் வைத்தால், ஆவணங்கள், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம்.தேவைப்படும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.

பாஸ்போர்ட் சம்பந்தமான சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பின் போது எந்த சிரமமும் இல்லாமல் 'டிஜி லாக்கர்' மூலம் பயனடையலாம். பொதுமக்கள் பாஸ்போர்ட் சேவையை விரைவாக பெறுவதற்கும் இது உதவும். டிஜி லாக்கர் பயன்படுத்தினால் விண்ணப்பதாரர்கள் அசல், நகல் ஆவ-ணங்களை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

பாதுகாப்பானது

டிஜி லாக்கர் பாதுகாப்புக்கு உரியது தானா என்று சந்தேகம் பலருக்கும் எழலாம். அதிகாரிகள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை இணையம் மூலமாகப் பெறும் வகையில் நவீன கால அரசு நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த மொபைல் செயலி 'உமாங்' மற்றும் அரசின் ஆவணங்களைப் பெற வழிசெய்-யும் டிஜிட்டல் லாக்கர் போன்றவை செயல்பாட்டில் உள்ளன.இந்த உமாங் செயலி மூலம் மத்திய, மாநில அரசு-கள் வழங்கும் 1,811 வகையான சேவைகளைப் பொதுமக்கள் பெற முடியும். அதே போல சான்றிதழ்கள் மற்றும் லைசென்ஸ்கள் வழங்கும் அதிகாரம் பெற்ற 1,684 அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் டிஜிட்டல் லாக்கர் வசதியு-டன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 628 கோடி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்-பட்டு அவை டிஜிட்டல் லாக்கரில் சேமிக்கப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்களின் மின்னணு ரீதியிலான ஒப்புதல் இன்றி எவர் ஒருவரும் இந்த ஆவணங்களைப் பார்க்-கவோ பதிவிறக்கம் செய்யவோ முடியாது. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தக-வல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டு, நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தப் பாதுகாப்பு ஏற்பா-டுகள் சரிவர அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறதா? என்பதை சீரான இடைவெளியில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை சேமித்து வைத்துள்ள டேட்டா பேஸ் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. எவர் ஒருவரும் நேரடியாக அதை அணுகமுடி-யாத அளவுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் அதற்கு உண்டு.

இந்த டிஜிட்டல் லாக்கரில் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை நாடு முழுக்க உள்ள ஐந்து லட்சத்து ஐம்பதா-யிரம் பொது சேவைகள் மையங்கள் மூலம் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் பெறலாம். இவற்றில் நான்கு லட்சத்து பத்தாயிரம் பொது சேவைகள் மையங்கள் கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்களும் இந்த வசதிகளை எளிதாகப் பெற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us