/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை
மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை
மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை
மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை
ADDED : செப் 25, 2025 12:31 AM
மே ட்டுப்பாளையம், காரமடை ரோட்டில் உள்ள மெட்ரோ பள்ளியில், பல்துறை பயிற்சிகள் வழங்கி வருகிறோம் என பெருமிதம் தெரிவிக்கின்றனர், பள்ளி முதல்வர் சுலோச்சனா, துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்.
இதுகுறித்து, இவர்கள் கூறியதாவது:
இப்பள்ளி, 1975ல் மழலையர் பள்ளியாக துவக்கப்பட்டது. 1985ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், கல்வி கட்டண சலுகை வழங்குகிறோம். தேசியளவில் நடந்த கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.
மேட்டுப்பாளையம் பள்ளிகளுக்கு இடையே குறுமைய அளவில் நடந்த குழு மற்றும் தடகள போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும், தனி நபர் பட்டமும் வென்றுள்ளனர். மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில், பயிற்சி அளிக்கிறோம். தவிர, பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், யோகா, கீபோர்டு, கர்நாடக இசை, சிலம்பம், கேரம், பாக்ஸிங் உட்பட கலை பயிற்சிகள் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அளிக்கின்றனர். பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்ஸ், சயின்ஸ் லேபாரட்டரீஸ், கம்ப்யூட்டர் லேப், ஏ.டி.எல். லேப் வசதிகள் உள்ளன. சுற்றுப்பகுதி கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக 16 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி தாளாளர் சித்துராம், பள்ளி குழு தலைவர் தியாகராஜன், பொருளாளர் வீராசாமி வழிகாட்டுதலுடனும், மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப்பின் ஒத்துழைப்புடனும் கல்வி சேவை அளித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.