/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரூரில் இறந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி கரூரில் இறந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி
கரூரில் இறந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி
கரூரில் இறந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி
கரூரில் இறந்தவர்களுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி
ADDED : செப் 30, 2025 10:18 PM

பொள்ளாச்சி:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பொள்ளாச்சி நகர, வடக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகர வடக்கு தி.மு.க. சார்பில், கரூரில் த.வெ.க., நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் முருகேசன், எம்.பி., ஈஸ்வரசாமி தலைமை வகித்தனர். சுற்றுச்சூழல் அணி மாநில துணை அமைப்பாளர் மணிசுந்தர் முன்னிலை வகித்தார்.
வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் நிர்வாகிகள், மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.


