/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு பிளாட் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள்ஒரு பிளாட் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள்
ஒரு பிளாட் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள்
ஒரு பிளாட் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள்
ஒரு பிளாட் வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய ஆவணங்கள்

விற்பனை பத்திரம்
விற்பனை பத்திரம் என்பது, சொத்துக்களின் உரிமையை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கும் போது, சட்டபூர்வமாக மாற்றி எழுதப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஆவணத்தில் சொத்தை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கும். சொத்தை வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டும்.
கட்டட அனுமதி
நாம் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். அப்ரூவல் பிளானில் உள்ளது போல், அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும்.
கட்டட நிறைவுச் சான்று
கட்டுமான பணி நிறைவடைந்திருந்தால், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு நிறைவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கட்டுமான உடன்படிக்கையில், உங்களது குடியிருப்பு எண் அடிப்படையில் எத்தனை அறைகள் உள்ளன என்பது இருக்கும்.
எங்கு வாங்கலாம்?
மனையின் மதிப்பு ஏறுமுகமாகவும், வீட்டின் மதிப்பு இறங்கு முகமாகவும் இருக்கும் என்பது பொதுவான கருத்து. யு.டி.எஸ்., கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ள குடியிருப்புகளில், வீடு வாங்குவது உகந்தது.


