/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : அக் 11, 2025 11:09 PM

கோவை: துடியலுார், ராக்கி பானஸ்ரி பள்ளி அருகே எமரால்ட் மற்றும் ஜுவல் ஒன் நிறுவனம் சார்பில்போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
கிரிஷா அறக்கட்டளை இணைந்து நடத்திய இப்போட்டியை, ஜுவல் ஒன் நிறுவன மேலாளர் சிவிலியன், கிரிஷா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தனர்.
நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே, ரூ.30,000, ரூ.20,000 மற்றும் ரூ.10,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு கோப்பை மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


