/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்களை வழிமறித்த யானை வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்களை வழிமறித்த யானை
வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்களை வழிமறித்த யானை
வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்களை வழிமறித்த யானை
வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்களை வழிமறித்த யானை
ADDED : செப் 24, 2025 11:34 PM

வால்பாறை: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், அம்பலப்பாறை என்ற இடத்தில் கபாலி என்று பெயரிடப்பட்ட யானை, மரத்தை ரோட்டில் சாய்த்து, அந்த வழியாக வந்த வாகனங்களை வறிமறித்து நடுரோட்டில் நின்றது. இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலாபயணியரும், அரசு பஸ்களில் பயணம் செய்த பயணியரும் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்ததும் வாளச்சால் துணை இயக்குநர் சுரேஷ்பாபு உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிரப்பள்ளி வனத்துறையினர், நீண்ட நேரத்திற்கு பின் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.