/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு
முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு
முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு
முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு
ADDED : பிப் 12, 2024 12:22 AM
பொள்ளாச்சி:''பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தில் தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது,'' என சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.
வறட்சியான கால கட்டத்தில், நிலையான பயிர்களை காப்பாற்ற நீர் வழங்கப்படும் சூழலில், தண்ணீர் திருட்டு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கடந்த, 8ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில், கண்காணிப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சப்- கலெக்டர் கேத்திரின் சரண்யா வெளியிட்டுள்ள அறிக்கை:
பருவமழை குறைவாக பெய்ததால், அணைகளின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. தற்போது, நிலையான பயிர்களை பாதுகாக்க நீர் வினியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலுார் தாலுகா பகுதிகளிலும், கடைமடை பகுதியான வெள்ளக்கோவில், குண்டடம், உடுமலை பகுதிகளுக்கு பாசன நீர் முறையாக செல்ல வேண்டி அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி நீர்வளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்படும் நாளான இன்று (12ம் தேதி) முதல், மார்ச், 10ம் தேதி வரை இக்குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழுவிலும், நான்கு துறைகளைச்சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாலை, 6:00 மணி முதல் மறு நாள் மாலை, 6:00 மணி வரை குழுவினர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டு கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட வேண்டும்.
மேலும், தினசரி கண்காணிப்பு குழு அலுவலர்கள், பணி தொடர்பாக சப் - கலெக்டர் அலுவலகத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.