தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்

மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்

மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்


ADDED : டிச 15, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்; பள்ளி மாணவர்கள் மனதளவிலும், உடல் அளவிலும் சிறந்து விளங்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி அவசியம் என, விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.

நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் பேசுகையில், ''மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதால் படிப்பு ஒருபோதும் பாதிக்காது. பள்ளியில் ஒரு மணி நேரம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர் உடல் அளவில் தகுதி பெற்று இருந்தால், படிப்பில் போதுமான கவனம் செலுத்தி முன்னேற முடியும். இக்காலத்தில் சிறு வயதிலேயே சர்க்கரை, ரத்த அழுத்தம் அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் மாணவர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க துரித உணவுகளை, மாணவர்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us