/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெடிமருந்து பறிமுதல் இருவருக்கு 'காப்பு'வெடிமருந்து பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
வெடிமருந்து பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
வெடிமருந்து பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
வெடிமருந்து பறிமுதல் இருவருக்கு 'காப்பு'
ADDED : பிப் 01, 2024 02:15 AM
கோவை:கோவை மாநகரபோலீசாருக்கு நேற்று, சென்னனுார் பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில், உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் போலீசார், சென்னனுாரை சேர்ந்த ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் வேலுசாமி, 65, என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர்.
இதில், வெடி பொருளான பொட்டாசியம் குளோரைடு, 50 மூட்டைகளில், 5 டன் இருப்பது தெரிந்தது.
பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த ஆசாத் நகரைச் சேர்ந்த முஹமது அர்ஷாத், 33, இதயத்துல்லா, 33, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் எதற்காக வெடிபொருட்களை பதுக்கியிருந்தனர் என விசாரணை நடக்கிறது.


