/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/லேடீசுக்கான 'பேஷனிஸ்ட்டா' இன்று விசிட் அடிக்கலாம் பேஷா!லேடீசுக்கான 'பேஷனிஸ்ட்டா' இன்று விசிட் அடிக்கலாம் பேஷா!
லேடீசுக்கான 'பேஷனிஸ்ட்டா' இன்று விசிட் அடிக்கலாம் பேஷா!
லேடீசுக்கான 'பேஷனிஸ்ட்டா' இன்று விசிட் அடிக்கலாம் பேஷா!
லேடீசுக்கான 'பேஷனிஸ்ட்டா' இன்று விசிட் அடிக்கலாம் பேஷா!
ADDED : பிப் 24, 2024 08:50 PM

வார இறுதிநாட்கள் வந்து விட்டாலே, ஷாப்பிங் கிளம்பி விடுவதுதான், இன்று பலரின் பொழுதுபோக்காக மாறி வருகிறது.
இதிலும், டிரெண்டாக, யுனிக் கலெக் ஷன் கொண்ட டிரஸ், அலங்கார பொருட்கள் மீது, யுவதிகளுக்கு எப்போதும் 'கிரேஸ்' இருக்கும். இந்த தேடலை, ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளது 'பேஷனிஸ்ட்டா' கண்காட்சி.
ரேஸ்கோர்ஸ், தாஜ்விவாந்தா ஓட்டலில், நடக்கும் இந்த கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருக்கின்றன. யுவதிகள் பல கடைகளில் தேடி தேடி கிடைக்காத டிரஸ் கலெக் ஷன், இங்கே குவிந்து கிடக்கிறது.
மெட்டீரியல், ரெடிமேட் சுடிதார், டாப்ஸ், வெஸ்டர்ன் டிரஸ், சேலைகள் என, வித்தியாசமான கலர் காம்பினேஷன்களில் இருக்கிறது. பீட்ஸ், ஸ்டோன் கொண்ட அலங்கார பொருட்களை இங்கே வாங்கலாம். டெரகோட்டா நகைகள், சுவர் அலங்கார பொருட்களுக்கு, பிரத்யேக அரங்கு இருக்கிறது. டிசைன் செப்பல்ஸ், பர்ப்யூம்ஸ், டிரை ப்ரூட்சும் கிடைக்கிறது. கண்காட்சி, இன்று நிறைவு பெறுகிறது.